மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
x

தக்கலை அருகே மின்தடையை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே மின்தடையை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஒப்பந்த ஊழியர்

தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மகன் ஏசுராஜன் (வயது26). இவர் இரவிபுதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் வெள்ளிகோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரின் மேலே செல்லும் உயிரழுந்த மின்கம்பியில் குருவி ஒன்று சிக்கி மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிரிந்தது. இதனால் அந்த டிரான்பார்மரில் இருந்து செல்லும் ஒரு மின்பாதையில் மின்சாரம் தடைபட்டது.

மின்சாரம் தாக்கியது

இதுபற்றி தகவல் அறிந்த ஏசுராஜன் சீரமைப்பு பணிக்காக நேற்று இரவு 7 மணியளவில் அங்கு சென்றார். பின்னர், அவர் டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின் இணைப்பை துண்டித்துள்ளர். அப்போது, மின்கம்பியோடு இணைந்திருக்கும் மூன்று கத்திகள் விலகிவிடுவது வழக்கம். ஆனால், அதில் ஒரு கத்தியில் பழுதானதால் அது மட்டும் விலகாமல் மின்கம்பியுடன் இணைந்திருந்துள்ளது. இதனால் அந்த மின்கம்பியில் மின் இணைப்பு துண்டிக்காமல் மின்சாரம் சென்று கொண்டிருந்திருக்கிறது.

இதையறியாத ஏசுராஜன் டிரான்பார்மரின் மீது ஏறி மேல்பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு நின்றவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏசுராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்படடது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஏசுராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தக்கலை ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்தடையை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story