மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ரிஷிவந்தியம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சத்தியராஜ்(வயது 27). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை-தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் கீழ்பாடி அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிரெய்லரின் பின்பக்கத்தில் சத்தியராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.