மொபட் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
மூங்கில்துறைப்பட்டு அருகே மொபட் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன்ஜெகன்(வயது 34). என்ஜினீயரான இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதுவரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது புதூரில் இருந்து ராவுத்தநல்லூர் நோக்கிச் சென்ற மொபட் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை டாக்டர்கள் அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story