கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சிதம்பரத்தில், வேலைவாய்ப்பு முகாம்; வருகிற 6-ந் தேதி நடக்கிறது


கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி     சிதம்பரத்தில், வேலைவாய்ப்பு முகாம்;      வருகிற 6-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 6-ந் தேதி சிதம்பரத்தில், வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கடலூர்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட உள்ளது. முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் மற்றும் விருத்தாசலத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.எனவே கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச்சான்று, குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இரண்டு (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய முகவரியிட்ட அஞ்சல் உறைகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மகளிர் திட்ட அலுவலகம், 3-வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் - 607001 என்ற முகவரியில் அணுகி அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story