46 ஆயிரத்து 931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து


46 ஆயிரத்து 931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
x

பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில் 46 ஆயிரத்து 931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்ட கருத்து வருமாறு:-

அமைச்சரவைக் கூட்டத்தில் மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில் 46 ஆயிரத்து 931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.38 ஆயிரத்து 698.80 கோடி மதிப்பிலான 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story