வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்


வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சென்னை வெர்டிகல் சொலுயூஷன் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டல் படி கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பாக வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடத்தினர். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் நாசர் வரவேற்றார்..

சிறப்பு விருந்தினராக சென்னை வெர்டிகல் சொலுயூஷன் நியமன அதிகாரி ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு எளிதில் பெற பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன் குறித்து பேசினார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கு பெற்றனர். 80 மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயமுருகன், மகேந்திரன், ஆரிப் ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story