வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்


வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் நவீன ஆன்லைன் வர்த்தகம் அடிப்படையில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி என்பது குறித்த 5 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் செல்லமுத்துக்குமாரசாமி தொடங்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பெரியசாமி, சங்கர், ராஜ்பால், பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் முகுந்தன்பரசு தலைமையில் பயிற்சியாளர்கள் சதீஷ், சுதாகர் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியளித்தனர். நவீன ஆன்லைன் வர்த்தகம் சார்ந்த வேலைவாய்ப்புகளை தேர்ந்தெடுப்பது, அதில் உள்ள வசதிகள், வருமானம் ஈட்டுவது, சிக்கல்களை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பி.காம், பி.காம்(சி.ஏ.), பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உள்ளனர்.


Next Story