ஈமு கோழி பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை


ஈமு கோழி பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
x

ரூ.5½ கோடி மோசடி செய்த ஈமுகோழி பண்ணை உரிமையாள ருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோயம்புத்தூர்

கோவை

ரூ.5½ கோடி மோசடி செய்த ஈமுகோழி பண்ணை உரிமையாள ருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஈமு கோழி பண்ணை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காட்டூர் ரோடு ரோஜா நகரில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு மற்றும் சி.என்.எஸ். என்ற ஈமு கோழி பண்ணை கடந்த 2012-ம் ஆண்டு கால கட்டத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செல்வகுமார், லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் 2 விதமான திட்டங்கள் உள்ளதாகவும், அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறினர். அதன்படி 1 லட்சத்து 70 ஆயிரம் முதலீடு செய்தால், முதலீட்டாளர்களுக்கு 6 ஈமு கோழி மற்றும் குஞ்சுகள், மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை கொடுப்பதாகவும் அறிமுகப்படுத்தினர்.

ரூ.5½ கோடி மோசடி

இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிக ளை சேர்ந்த 140 முதலீட்டாளர்கள் ரூ.5 கோடியை 56 லட்சத்து 55 ஆயிரத்தை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி ஊக்கத்தொகையோ அல்லது முதலீடு தொகையோ திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட விஜயகுமார் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமார் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

10 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.ரவி, ஈமு பண்ணை உரிமையாளர் செல்வகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 கோடியே 60 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story