கூடலூர் நகராட்சியில் என் மண் என் தேசம் திட்ட முகாம்


கூடலூர் நகராட்சியில் என் மண் என் தேசம் திட்ட முகாம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:30 AM IST (Updated: 17 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சியில் என் மண் என் தேசம் திட்ட முகாம்

நீலகிரி

கூடலூர் நகராட்சியில் என் மண் என் தேசம் திட்ட நிகழ்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் மரம் நடுதல், மக்கள் பங்களிப்புடன் பெரிய அளவிலான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், சுதந்திர தினத்தில் அனைவரும் இணைந்து தேசிய கீதத்தை பாடி சிறப்பித்தல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் பரிமளா, ஆணையர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ், மன்ற உறுப்பினர்கள், பள்ளி -கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story