ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை, தங்கும் அறை மற்றும் சிமெண்டு ரோட்டில் கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவை கட்டப்பட்டு்ள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பை அகற்ற ஈஞ்சம்பள்ளி கிராமத்துக்கு மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மாயவன், ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் நேற்று சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிமெண்டு ரோடு தோண்டப்பட்டு் மண் போட்டு கழிவுநீர் தொட்டி மூடப்பட்டது. அதன்பின்னர் அருகே கட்டப்பட்டு் இருந்த குளியலறையும், கழிவறையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இதையொட்டி மலையம்பாளையம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 11 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story