உசிலம்பட்டி அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றம்


உசிலம்பட்டி அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

உசிலம்பட்டி அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் இருந்த பழைய கட்டிடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது.இந்த சூழலில் பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த புள்ளி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தை அல்லிகுண்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவி விஜயாவின் கணவரும் தி.மு.க. கிளைச் செயலாளருமாக கண்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தும் அப்புறப்படுத்தாத காரணத்தால், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் சேடபட்டி போலீசில் புகார் செய்தார்.இதனைத் தொடர்ந்து பேரையூர் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி புதிய பள்ளி கட்டிடம் கட்ட இடத்தை தேர்வு செய்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஆக்கிரமிப்பை அகற்றி அளவை செய்து கொண்டிருந்த போது ஊராட்சி மன்ற தலைவர் கணவருக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.


Next Story