மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி


மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
x
தினத்தந்தி 28 Jun 2023 7:30 PM GMT (Updated: 28 Jun 2023 7:30 PM GMT)

கடமலைக்குண்டுவில் மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

தேனி

கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கான மயானம் கரட்டுப்பட்டி மூலவகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மயானத்தில் மரம், செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் சிலர் மயானத்தில் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் இறந்தவர்கள் உடல்களை புதைப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மயானத்தில் மரம், செடிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தேசிய ஊரக வேலை பணியாளர்கள் மூலம் மயானத்தில் ஆக்கிரமித்திருந்த செடி, கொடிகளை அகற்றினர். மேலும் குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பணிகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், துணைத் தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து மயானத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.


Next Story