உடுமலை-செஞ்சேரிமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


உடுமலை-செஞ்சேரிமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

உடுமலை-செஞ்சேரிமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர்

குடிமங்கலம்

உடுமலையிலிருந்து செஞ்சேரிமலைக்கு பெதப்பம்பட்டி வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரகவாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சுமார்1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை ஆக்கிரமித்து இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று உடுமலை-செஞ்சேரிமலை சாலையில் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது "் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும்" என்றனர்.



Next Story