பி.என்.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பி.என்.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

பி.என்.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் சனிக்கிழமைதோறும் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள்.

அதன்படி நேற்று காலை திருப்பூர் பி.என்.ரோட்டில் பிச்சம்பாளையம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். பெயர்பலகை, தற்காலிக பந்தல், தடுப்புகள் உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றினார்கள். பெரும்பாலானவர்கள் அவர்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அவசர அவசரமாக அகற்றியதை காணமுடிந்தது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story