பொள்ளாச்சி ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு


பொள்ளாச்சி  ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி -கோைவ ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி -கோைவ ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.


குறைதீர்க்கும் கூட்டம்


பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது வணிக வளாக வாடகைதாரர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன்புறம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.


ஆக்கிரமிப்பு


இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் அனுமதியின்றி ஷெட் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நகராட்சி மூலம் நோட்டீசு அனுப்பியும் அகற்றப்படவில்லை. மேலும் தண்ணீரை தேக்கி வைத்து உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்கள் பெறப்பட்டன. இதில் நகராட்சி என்ஜினீயர், நகரமைப்பு அலுவலர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.





Next Story