சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மீண்டும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்


சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மீண்டும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
x

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மீண்டும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சாட்சியாபுரம், ரிசர்வ்லைன் பகுதிகளில் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். அதிகாரிகள் முயற்சியால் 3 கி.மீ. தூர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதி அகலமாக காணப்பட்டது. வாகனங்களும் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பகுதியில் சிலர் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகளை அகலப்படுத்தி வருகிறார்கள். இதனால் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story