நீர்வரத்து பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்வரத்து பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அருப்புக்கோட்டை கோட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தாசில்தார், பொதுப்பணித்துறை, விவசாயத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளாட்சித் துறை, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராம்பாண்டியன் கூறுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. கல்குறிச்சி - அருப்புக்கோட்டை - பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் மழை நீர் ஓடை வழியாக 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு மழை நீர் சென்றடைகிறது. தற்போது சோலார் மற்றும் அதிக நிலம் வாங்குபவர்கள் இந்தநிலப்பகுதி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து அடைத்து விடுகின்றனர்.

தடுப்பணை

இதனால் கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் போகிறது. நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். இப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த ஓடைகளை சரிபார்த்து சரி செய்ய வேண்டும். தெற்காறு வழியாக தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல குறுக்கே தடுப்பணை பணியினை ெதாடங்க ேவண்டும்.

முடுக்கங்குளம் சிவசாமி:- சிறிய நீர் வழிப்பாதை மட்டும் உள்ள சிறிய கண்மாய்களுக்கு நீர்வழி பாதையை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.


Next Story