தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சுதந்திர தினத்தன்று பள்ளி சென்று திரும்பிய மாணவி சாலை ஆக்கிரமிப்பால் பலியானது குறித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் நீதி மய்யத்தின் மாணவர் அணி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது காவல்துறையின் உதவியோடு அங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உடனடி நடவடிக்கை வரவேற்புக்குரியது. அதேநேரம் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த விஷயத்தில் அரசின் தொடர் கண்காணிப்பு அவசியம். அத்துடன் இதுபோல் இன்னொரு பலி ஏற்படாமல் தடுத்திடும் வண்ணம் தமிழகமெங்குமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story