கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருப்பரங்குன்றம்,
கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள்குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் அனீஸ்சத்தார் தலைமை தாங்கினார். தலையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) பாலகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள், நீர்வழிப் பாதைகளில் கட்டிடங்களாகவும், பிளாட்டுகளாகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மழைநீரும், விவசாயத்துக்காக திறந்துவிடப்படும் வைகை தண்ணீர் நேரடியாக கண்மாய்களுக்கு வருவதில்லை.
ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் அனீஸ் சத்தார் கூறினார். இந்தநிலையில் ஜெகநேசன் கூறுகையில், தனக்கன்குளம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை என கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கூறினார்.