சவுட்டஅள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்


சவுட்டஅள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்
x
தினத்தந்தி 25 Nov 2022 1:00 AM IST (Updated: 25 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சவுட்டஅள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சவுட்டஅள்ளி ஊராட்சி மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், சவுட்டஅள்ளி ஊராட்சி ராமர்பட்டினம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான காடுகளை அழித்து தனிநபர் ஒருவர் சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த நிலத்தில் 5 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளோம். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story