முடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம்: காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய மக்கள்


முடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம்: காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய மக்கள்
x

சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வாங்க மீன்பிரியர்கள் அலைமோதினர்.

சென்னை,

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்ததால், மீனவர்கள் தற்போது கடலில் சென்று மீன்கள் பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க மீன்பிரியர்கள் அலைமோதினர். விடுமுறை நாள் என்பதாலும், கடலில் இருந்து மீன்கள் பிடித்து வருவதால், விலை குறையும் காரணத்தினாலும் மீன்சந்தையில் மக்கள் அதிக அளவில் திரண்டனர்.


Next Story