கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் உள்ள சங்கரின் வீடு மற்றும் அலுவலகம், கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை, அம்பாள் நகரில் உள்ள வீடு என மொத்தம் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story