உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
x
தினத்தந்தி 17 July 2023 7:53 AM IST (Updated: 17 July 2023 9:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய பாதுகாப்பு படையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த மாதம் 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.இதையடுத்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story