மாற்றத்திற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்


மாற்றத்திற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்
x

தமிழக அரசியலில் மாற்றத்திற்கான வேலைகளில் பா.ஜ.க.வினர் கடுமையாக ஈடுபட வேண்டும் என மத்திய மந்திரி வி.கே.சிங் பேசினார்.

வேலூர்

தமிழக அரசியலில் மாற்றத்திற்கான வேலைகளில் பா.ஜ.க.வினர் கடுமையாக ஈடுபட வேண்டும் என மத்திய மந்திரி வி.கே.சிங் பேசினார்.

நிர்வாகிகள் கூட்டம்

குடியாத்தம் நகர பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியாத்தம் நகர தலைவர் ராஜசெல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் கோ.வெங்கடேசன், வேலூர் மாவட்ட தலைவர் ஜே.மனோகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து இணை மந்திரியுமான வி.கே.சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

மாற்றத்திற்கான வேலைகளில்...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான அரசியல் களத்தை தொடங்கியுள்ளோம். மாற்றத்திற்கான வேலைகளில் நாம் கடுமையாக ஈடுபட வேண்டும். தமிழக அரசியலில் உள்ளவர்கள் அதிக அளவு தங்களது குடும்பத்தினருக்கே நல்லது செய்து கொண்டுள்ளனர்.

பா.ஜ.க. நிர்வாகிகள் பாரதப் பிரதமரின் மக்கள் நல திட்டங்களை அனைத்து தரப்பு பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக ஏழை, எளிய மக்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெண் குழந்தைகள், சிறிய அளவிலான வியாபாரிகள் முதல் அனைத்து தரப்பினருக்காக பிரதமர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து எடுத்துச் சொன்னால் பிரதமரின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் இடையே நல்ல ஒரு விழிப்புணர்வு ஏற்படும். தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார், நகர பொதுச்செயலாளர் ரங்கநாதன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் எம்.சுசில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கோரிக்கை மனு

அதேபோன்று தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் கூட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் கலந்துகொண்டார். தொழிலதிபர் ஏ.முகமது அமீன் சாகிப், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, ஆடிட்டர் ரகுராம், உமேஷ், ரோட்டரி சங்க நிர்வாகி ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சீனாவில் இருந்து தற்போது லைட்டர் இறக்குமதி செய்யப்படுகிறது. இது ஒரு முறை பயன்படுத்தும் லைட்டராகும். இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் மத்திய மந்திரியிடம் மனு அளித்தனர்.


Next Story