என்ஜின் பராமரிப்பு பணி: சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இன்று ரத்து


என்ஜின் பராமரிப்பு பணி: சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இன்று ரத்து
x

என்ஜின் பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

சேலத்தில் இருந்து தினமும் சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு மல்லூர், ராசிபுரம், நாமக்கல் வழியாக காலை 7.10 மணிக்கு கரூர் சென்றடையும். இந்த நிலையில் சேலம் - கரூர் பயணிகள் ெரயில் (வண்டி எண் 06831) என்ஜின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story