கொலை வழக்காக மாற்றி என்ஜினீயர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலை வழக்காக மாற்றி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலை வழக்காக மாற்றி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
மஞ்சள் காமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் வசித்து வந்தவர் வீரபிரபு (வயது26). இவருக்கு மஞ்சள்காமாலை இருந்து வந்துள்ளது.
இந்த நோய்க்கு நாட்டு வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 22.02.21-ந் தேதியன்று படுக்கையில் இருந்தவர் மர்மமான முறையில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார்.
என்ஜினீயர் கைது
இதையடுத்து வீரபிரபுவின் மனைவி காயத்ரி (23), 24.06.21-ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீரபிரபு இறந்தது தொடர்பாக மம்சாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி என்ஜினீயர் கிருஷ்ணவிக்னேஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.