துரைப்பாக்கத்தில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை - போலீசார் விசாரணை


துரைப்பாக்கத்தில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை - போலீசார் விசாரணை
x

துரைப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னையை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 48). இவர் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று இரவு நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் பணிசுமை காரணமாக சாப்ட்வேர் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story