ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை
x

ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே என்ஜீனியர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடத்துள்ளது.

ராணிப்பேட்டை

என்ஜினீயர் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாகுப்பம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 34). டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு பெரியங்குப்பம் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் ஆம்பூர் அருகே பச்சக்குப்பம் ரெயில் நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து தானாப்பூர் சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதில் உடல் உருக்குலைந்து அடையாளம் தெரியாத வகையில் இறந்து கிடந்தார்.

திருமணம்

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட வெற்றிவேலுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததும், வருகிற கார்த்திகை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்ததும் தெரியவந்தது. இது. குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story