கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை


கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடியில் கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

புளியங்குடி டி.என்.புதுக்குடி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மகன் அருணகிரி (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

விடுமுறைக்காக ஊருக்கு வந்த அருணகிரிக்கும், தந்தை பழனிக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 27-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அருணகிரி, வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

கிணற்றில் பிணமாக மிதந்தார்

பெற்றோர், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை புளியங்குடி- சங்கரன்கோவில் மெயின் ரோடு அருகில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக புளியங்குடி போலீசாாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காணாமல் போன அருணகிரி என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story