என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திசையன்விளையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை தங்கம் திருமண மண்டப தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருடைய மகன் பாலாஜி (வயது 28). பி.இ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த என்ஜினீயர் பாலாஜி பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் தலைவலி குணம் ஆகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story