சேதமடைந்த குப்பன் வாய்க்காலில் செயற்பொறியாளர் ஆய்வு


சேதமடைந்த குப்பன் வாய்க்காலில் செயற்பொறியாளர் ஆய்வு
x

கீழையூர் அருகே சேதமடைந்த குப்பன் வாய்க்காலில் செயற்பொறியாளர் ஆய்வு செய்தனர்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கருங்கண்ணி ஊராட்சி, கிழக்கு கடற்கரை சாலைக்கு தெற்கு பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விளைநிலங்களில் மழை வெள்ள காலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, இப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு 2021-ம் ஆண்டு ஏற்பட்ட கன மழையால் வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இந்தநிலையில், சேதமடைந்த குப்பன் வாய்க்கால் மற்றும் மில்லடி வாய்க்கால், ராதாமடை வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி சேதமடைந்த குப்பன் வாய்க்காலை வெண்ணாறு பாசன பகுதி செயற்பொறியாளர் முருகவேல் நேற்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி செயற்பொறியாளர் மதியழகன், கீழையூர் ஒன்றிய விவசாய சங்க தலைவர் பால்சாமி, கருங்கண்ணி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பாலு, ராமலிங்கம் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story