பஸ் மோதி என்ஜினீயர் பலி


பஸ் மோதி என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பஸ் மோதி என்ஜினீயர் பலியானாா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

திருவள்ளூர் மாவட்டம் பூங்கா நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் எழிலரசன்(வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகன் ரிஸ்வான்(24) என்பவரும் நண்பர்கள் ஆவர். என்ஜினீயர்களான இவர்களில் ரிஸ்வான், உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். எழிலரசன் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் 2 பேரும் நேற்று மாலை சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆசனூருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை எழிலரசன் ஓட்டி வந்தார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சேலம் ரவுண்டானா அருகில் வந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது உரசி நிலை தடுமாறு கீழே விழுந்தது. இதில் எழிலரசன் மற்றும் ரிஸ்வான் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த பஸ் சக்கரம், ரிஸ்வான் தலையில் ஏரி இறங்கியது. இதில் தலைநசுங்கி ரிஸ்வான் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் எழிலரசன் படுகாயம் அடைந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து வந்து எழிலரசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரிஸ்வான் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story