பொறியியல் மாணவர் சேர்க்கை - இதுவரை 2.29 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பம்


பொறியியல் மாணவர் சேர்க்கை - இதுவரை  2.29 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் வழியே  விண்ணப்பம்
x

2.29 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது..

http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் இன்று மாலை வரை 2.29 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story