பொறியியல் கலந்தாய்வு - முதல் நாளில் 18,763 பேர் விண்ணப்பம்


பொறியியல் கலந்தாய்வு - முதல் நாளில் 18,763 பேர் விண்ணப்பம்
x

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இந்த சூழலில் ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி, பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்பபதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 18,763 பேர் விண்ணப்பத்துள்ளனர். இதில் 4,199 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து ஆகஸ்டு 16-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story