யோகாசனத்தில் என்ஜினீயரிங் மாணவி சாதனை


யோகாசனத்தில் என்ஜினீயரிங் மாணவி சாதனை
x

விருதுநகரில் யோகாசனத்தில் என்ஜினீயரிங் மாணவி சாதனை புரிந்தார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் பாண்டியன் நகரைச்சேர்ந்த மணிகண்டன்- ஜானகி தம்பதியின் மகள் அனுப்பிரியா (வயது 19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் அனுப்பிரியா சிறுவயது முதலே யோகாசனத்தில் ஆர்வம் கொண்ட நிலையில் மாநில அளவிலான யோகாசன போட்டியில் கலந்து கொண்டு 2-வது இடம் பெற்றார். இந்நிலையில் நேற்று நோபிள்உலக சாதனை பதிவுக்காக விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அனுப்பிரியா 15 அடி உயரத்தில் 8 நிமிடங்கள் யோகாசனம் செய்து சாதனை புரிந்தார். இந்நிகழ்வினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். மாணவியின் சாதனையை பாராட்டி இவருக்கு நோபிள்சாதனைபதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story