ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே நேற்று மாலை வாரணாசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் அவரது உடல் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டு விழுந்தது. ரெயில்வே கேட் அருகே நின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பதற்றமடைந்தனர். தற்கொலை செய்துக்கொண்டவர் காரைக்குடியை சேர்ந்த பிரகாஷ் (வயது 19) என்பதும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story