மோட்டார்சைக்கிளில் சென்றபோது மின்னல் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு


மோட்டார்சைக்கிளில் சென்றபோது மின்னல் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே ேமாட்டார்சைக்கிளில் சென்றபோது மின்னல் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வினய் குமார் (வயது 21). காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது வினய்குமார் தனது மோட்டார் சைக்கிளில், தன்னுடன் படிக்கும் ரேவனு, திவ்யதேஜாவு ஆகியோருடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பான் சத்திரத்தில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மின்னல் தாக்கி பலி

கல்லூரி அருகிலேயே பெங்களூரு- சென்னை தேசிய சாலையில் சென்றபோது திடீரென வினய்குமார் மீது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வினய் குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

அவரது நண்பர்கள் இருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

*மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விரக்தி அடைந்த சூைளயை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் விக்னேஷ் (வயது 28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*கொடுங்கையூரில் மகள் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கி தருவதாக கூறி லோகநாதன் என்பவரது ஆதார் அட்டையை வாங்கி நூதன முறையில் செல்போன் வாங்கி மோசடி செய்த ஸ்ருதி (38) கைதானார்.

*பள்ளிக்கரணையில் மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.

*தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரி பிரகாஷ்பாபு(47) என்பவரை தாக்கி ரூ.8 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சுரேஷ் (32), சிவா (30) சிக்கினர்.

*மதுரவாயலில் காரில் 30 கிலோ குட்கா கடத்தியதாக தினேஷ்குமார் (28), பஜன்லால் (24), பரசுராம் (28) ஆகியோரும், கொடுங்கையூரில் மளிகை கடையில் குட்கா விற்றதாக ஜேவியர் ராயப்பாவும் கைதானார்கள்.


Next Story