என்ஜினீயரிங் மாணவர் திடீர் சாவு


என்ஜினீயரிங் மாணவர் திடீர் சாவு
x

என்ஜினீயரிங் மாணவர் திடீரென இறந்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே வடக்கு ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் முனி பரத் (வயது 22). இவர் மதுரையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்து வந்தார். இவருக்கு மூட்டு வலி ஏற்பட்டு நாட்டு வைத்தியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்த இவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story