மாமல்லபுரத்தில் கரகத்துடன் ஆடிய இங்கிலாந்து பெண்..! - ரசித்து பார்த்த சுற்றுலா வாசிகள்


மாமல்லபுரத்தில் கரகத்துடன் ஆடிய இங்கிலாந்து பெண்..! - ரசித்து பார்த்த சுற்றுலா வாசிகள்
x
தினத்தந்தி 27 Sep 2022 3:08 PM GMT (Updated: 27 Sep 2022 3:19 PM GMT)

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பலூன்கள் பறக்கவிடப்பட்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உலக சுற்றுலா தினவிழா களை கட்டியது.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வண்ண, வண்ண கலரில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. உலக சுற்றுலா தின விழா ஆட்டம், பாட்டத்துடன் நடந்ததால் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் களைகட்டி காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த இங்கிலாந்து நாட்டு பெண், கரகம், காவடி ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து உற்சாகமடைந்து அக்குழுவினருடன் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்தார்.


Next Story