ஆங்கில இலக்கிய மன்ற விழா
சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடந்தது.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் கலந்துகொண்டு இலக்கிய மன்ற விழாவை தொடங்கி வைத்து பேசினார்.பெற்றோர் ஆசிரியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறந்த நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story