ஏ.வி.கே.இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் சேர்க்கை


ஏ.வி.கே.இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:45 PM GMT)

சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

சங்கரன்கோவிலில் ஏ.வெங்கடேஷ் குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் இயங்கிவரும் ஏ.வி.கே. இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியில் கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு 12-வது ஆண்டை நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக ஏ.வி.கே. கல்வி பள்ளி குழும தலைவர் டாக்டர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் அறிவுறுத்தலின்படி இந்த சிறப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

இதை பள்ளி முதல்வர் எஸ்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வருகிற 5-ந் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

மேலும் நவராத்திரி கொலு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story