மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 July 2023 2:15 AM IST (Updated: 23 July 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு மாதமும் அனைத்து துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொண்டு அனுப்பப்படும் அறிக்கை, தமிழக அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே கள ஆய்வின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வருவாய்த்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை புதுப்பித்தல் மற்றும் நிலுவையில் உள்ளவைகளை பதிவு செய்தல் வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இணைந்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கவுதம், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா, மணிகண்டன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story