விதிமுறைகளுடன் குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்


விதிமுறைகளுடன் குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
x

மாவட்டத்தில் விதிமுறைகளுடன் குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


மாவட்டத்தில் விதிமுறைகளுடன் குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குவாரிகள்

விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரிகள், மணல் குவாரிகள், கிராவல் மண் குவாரிகள் ஆகியவை முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும். பொதுவாக குவாரிகள் செயல்பாட்டால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போதும், பொதுமக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாளிலும் புகார் கூறுவது தொடர்கிறது.

விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் உரிமம் ஒரு வருடத்திற்கு முன்பே காலாவதியாகி விட்ட நிலையில் செயல்பட்டு வந்த கல்குவாரியை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

கண்காணிப்பு

குவாரிகளின் செயல்பாடு மற்றும் உரிமம் வழங்குதல் தொடர்பான ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ள மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த துறையினர் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளாததும், கண்காணிப்பு நடவடிக்கை எடுக்காததுமே குவாரிகள் தொடர்பான பல்வேறு புகார்கள் எழுப்பப்படுவதற்கு காரணமாகி விடுகிறது.

உரிமம் இல்லாமல் ஓராண்டிற்கு மேல் செயல்பட்ட கல்குவாரியை கனிமவளத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்திலுள்ள குவாரிகள் முறையாக உரிமம் பெற்று விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story