சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.

ஊட்டி,

காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பாக வன அலுவலர்களுக்கான கருத்தரங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறியதாவது:-

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இயற்கையை பாதுகாப்பதில் நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும். வனப்பகுதிகள் நீர் நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் நீதிமன்றத்தில் வழங்கப்படும் அனைத்து தீர்ப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுகிறது. இதனை முறையாக பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story