அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு
அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தி. இவர் மாநில வன்னியர் சங்க செயலாளராக உள்ளார். இவரது புதிய இல்ல திறப்பு விழாவில் கலந்து கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அவருக்கு அரியலூர் மாவட்ட பா.ம.க. தலைவரும், மாவட்ட துணை சேர்மனுமான அசோகன் தலைமையில், மாவட்ட கவுன்சிலரும், திட்டக்குழு உறுப்பினருமான வசந்தமணி செல்ல ரவி, ஆண்டிமடம் மாவட்ட கவுன்சிலர் நக்கீரன், செந்துறை ஒன்றிய செயலாளர் காமராஜ், ஒன்றிய துணைத் தலைவர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் கொளஞ்சியப்பன் மற்றும் பா.ம.க. பொறுப்பாளர்கள் வன்னியர் ரமேஷ், தனச்செல்வன், குமார், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் அருள், தமிழ்ச்செல்வன், சூர்யா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story