முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

திருவாரூர் மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை வழியாக திருவாரூர் வந்தார். மதியம் 1.50 மணிக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையிலும், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு முன்னிலையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராசமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

உற்சாக வரவேற்பு

காரில் இருந்தபடியே கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். செண்டை மேளங்கள் முழங்க, கருப்பு, சிவப்பு பலூன்களுடன் தொண்டர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக முதல்-அமைச்சரை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.


Next Story