பெண்களுக்கு உரிமை தொகைக்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள்
ராசிபுரத்தில் பெண்களுக்கு உரிமை தொகைக்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்.
ராசிபுரம்
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ராசிபுரத்தில் உள்ள சுஜிதா திருமண மண்டபத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான கலைஞர் மகளிர் உரிமை திட்ட வங்கி பற்று அட்டைகளை (ஏ.டி.எம். கார்டு) வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகைக்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினர். இதில் ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மதுரா செந்தில், முன்னாள் எம்.பி.பி.ஆர். சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுவாமி, ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், ஆர்.எம். துரைசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அரங்கசாமி, பேரூராட்சி தலைவர்கள் ராஜேஷ், போதம்மாள், சுமதி, லோகாம்பாள், பேரூராட்சி துணைத் தலைவர்கள் அன்பழகன், செல்வராஜ், ஜெயக்குமார், நல்லதம்பி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.