மானியத்துடன் கடனுதவி பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்


மானியத்துடன் கடனுதவி பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்
x

மானியத்துடன் கடனுதவி பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்

தொழில்வளம் பெருகுவதற்கான இணக்க சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழக அரசு, சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெற மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று, மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம்' ஆகும். இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. எனவே உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை நிறுவவும், விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 76 பேர் தொழில் தொடங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டத்துக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை பெற வாலாஜாநகரத்தில் உள்ள அரியலூர் மாவட்ட தொழில் மையத்தை நேரில் அல்லது 8925533924, 8925533925, 8925533926 என்ற செல்போன் எண்களையோ, 04329-228555 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story