தொழில் முனைவோர் மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி இணைந்து தொழில் முனைவோர் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை கல்லூரியில் நடத்தின. கல்லூரி முதல்வர் அ.முகமதுசாதிக் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் கலந்து கொண்டு தொழில் முனைவோர் அடையக்கூடிய இலக்குகள், வளர்ச்சி நிலைகள் குறித்து பேசினார். மேலும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சுந்தரராஜன் கலந்து கொண்டு தொழில் முனைவோர் வெற்றி அடைவதற்கான வழிமுறைகள், சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரும் பேசினார். இதில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆங்கில துறை பேராசிரியர் யோகேஷ்பிரபு தொகுத்து வழங்கினார். முடிவில் தொழில் முனைவோர் திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன் நன்றி கூறினார்.