தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கம்


தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கம்
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:47 PM GMT)

கடையநல்லூர் அரசு கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளை வருங்கால தொழில் முனைவோராக உருவாக்கும் பொருட்டு கல்லூரியில் செயல்பட்டு வரும் "தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு - புத்தாக்க நிறுவன மையம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிதியுதவியுடன் இறுதியாண்டு மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான ஒரு நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் கவிதா முத்தையா, மாவட்ட தொழில் நிறுவனங்கள் மைய பொது மேலாளர் மாரியம்மாள் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். அதனை ெதாடர்ந்து முனைவர் திருமலைக்குமார், முனைவர் ராஜேஷ் கண்ணா, ஆகியோர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்னும் தலைப்பில் பேசினர். கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர்கள் மருதமுத்து, உதவி பேராசிரியர் இசக்கியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மைய ஒருங்கிணைப்பாளர் மகேஷ், வணிக நிர்வாகவியல் உதவி பேராசிரியர் முரளிதரன், கள ஒருங்கிணைப்பாளர் சுவைதரன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story